Trending News

பப்புவா நியூ கினியா தீவில் 4.8 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

(UTV|COLOMBO )-பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 4.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 9:34 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இயாலிபு நகருக்கு தெற்கே சுமார் 59 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 4.8 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நேற்று முன்தினமும்  இங்கு 6.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

“விஞ்ஞான ஆய்வுகூடம்”அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

Mohamed Dilsad

புரட்சிகர Camera வடிவமைப்புடன் கூடிய V17 Pro இலங்கையில் அறிமுகம்

Mohamed Dilsad

Austin Fernando to be appointed President’s Secretary

Mohamed Dilsad

Leave a Comment