Trending News

மஸ்கெலியாவில் காணாமல் போன அண்ணன் தங்கை சடலமாக மீட்பு

(UTV|NUWARA ELIYA)-மஸ்கெலியா கவரவில பாக்றோ பகுதியில் காணமல் போன அண்ணன் தங்கை இருவரும் மஸ்கெலியா  கவரவில ஆற்றிலிருந்த சடலமாக மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

கொழும்பு கனேமுல்ல பகுதியில்  பணி புரியும் சுப்ரமணியம்  மகேந்திரன் 28 வயது (சின்னம்மாவின் மகளான தங்கை உறவான)   மகாலெட்சுமி 19 வயதுடடைவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
கடந்த 23 ம் திகதி வீட்டு நிகழ்வென்றிற்காக வருகைத்தந்தவர்கள் தனது கையடக்கதொலைபேசி காணமல் போனமை தொடர்பில்  கடந்த 26 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ய சென்றவர்கள் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
கெப் வண்டியில் சென்றவர்கள் மீண்டும் வீடு வராத நிலையில் உறவினர்களினால் 26. ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்  பிரதேச வாசிகளினால் அநாதரவாக நின்ற கெப் ரக வண்டியை  சந்தேகம்கொண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்  சம்பவயிடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸார் அட்டன் பொலிஸ் நிலைய ஜொனி மோப்பநாயின் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டபோது கவரவில. போட்றோ ஆற்றுப்பகுதியில் பாதணிகள் கைக்குட்டை மற்றும் ஆடைகளை மீட்டதுடன்   சந்தேக கொண்ட பொலிஸார் கடற்படையினரின் சுழீயோடி பிரிவினரின் உதவியுடன் ஆற்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே ஆற்றிலிருந்த சடலமாக மீட்கப்பட்டனர்  மீட்கப்பட்ட சடலம் அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்  பிரதேச பரிசோதணைகாக நவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க உள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா வெளிநாடு செல்லத் தடை

Mohamed Dilsad

Adverse weather cost 8 lives

Mohamed Dilsad

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சனுக்கு டிரம்ப் அழைப்பு

Mohamed Dilsad

Leave a Comment