Trending News

கோட்டபாயவின் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

(UTV|COLOMBO)-பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபகஷவுக்கு எதிராக பொதுச் சொத்துக்களை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த இடைக்காலத் தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதிபதி எல்.ரீ.பீ. தெஹிதெனிய மற்றும் ஸிரான் குணரத்ன ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு மண்டபத்தை நிர்மாணிப்பதற்காக 3 கோடி ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம்தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை முன்னோக்கி கொண்டுசெல்வதை தடுக்குமாறு இடைக்கால தடை ஒன்றை இந்த மனுவின் ஊடாக அவர் கோரியிருந்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

விக்டர் ரத்னாயக்கவின் மனைவி தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Rupee ends steady

Mohamed Dilsad

‘Joker’ crossing USD 1 bn worldwide

Mohamed Dilsad

Leave a Comment