Trending News

தொடரும் மண்சரிவு எச்சரிக்கை

(UTV|COLOMBO)-இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன வெலிகபொல பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை 24 மணித்தியாலங்களைக்கொண்டதாக இன்று இரவு 7.30 வரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரை அதிகரித்துள்ளதனால் , மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு , பாறை விழுகை , நிலவெட்டுசாய்வு மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

President joins to celebrate Mahinda Rajapaksa’s birthday

Mohamed Dilsad

Kobe Bryant is nominated for an Oscar

Mohamed Dilsad

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி

Mohamed Dilsad

Leave a Comment