Trending News

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்

(UTV|POLANNARUWA)-சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்படவுள்ள பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

சீன அரசாங்கத்தின் 120 கோடி ரூபாய் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள இந்த சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலை தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய வைத்தியசாலை ஆகும்.

 

இந்த வைத்தியசாலையில் சகல வசதிகளும் கொண்ட 200 கட்டில்கள் நோயாளர்களுக்காக அமைக்கப்படவுள்ளது. வெளிநோயாளர் சேவை பிரிவும் இதில் அமையவிருக்கிறது.

மேலும் , சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்த மாற்று வசதி வழங்கும் 100 கட்டில்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் நிர்மாணப் பணிகளுக்கு ஆயிரத்து 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுநீரக நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட சகல சேவைகளையும் இந்த வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

 

alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Taylor Swift dons red floral dress on NYC premiere of ‘Cats

Mohamed Dilsad

நல்லாட்சி அரசாங்கத்தை ஆராய குழு

Mohamed Dilsad

72 வயது மகனை சுட்டுக்கொன்ற 92 வயது தாய்

Mohamed Dilsad

Leave a Comment