Trending News

இந்தியாவுடனான இறுதி போட்டியில் தனஞ்சயடி சில்வா அபாரம்

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இறுதிநாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் 410 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, சற்று முன்னர் வரையில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 168 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் துடுப்பாடிவரும் தனஞ்சயடி சில்வா டெஸ்ட் போட்டியில் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை சற்றுமுன்னர் பெற்றார்.

இந்திய அணி தமது முதலாவது இன்னிங்சில் 536 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 246 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

දකුණු කොරියානු ජනාධිපතිවරයා ලෙස ලී ජේ-මියුන්ග් දිවුරුම් දෙයි.

Editor O

Increase in rain expected from tomorrow

Mohamed Dilsad

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கட்டட தீ விபத்தில் சுமார் 50 வாகனங்கள் சேதம்

Mohamed Dilsad

Leave a Comment