Trending News

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் மரணம்

(UTV|INDIA)-தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன்.

இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்‘, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள் பிரபலமானவை.
இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏராளமான ரீமிக்ஸ் பாடல்களையும், பாப் பாடல் களையும் பாடி இருக்கிறார். இசை அமைப்பாளர் டி.இமான் இவரிடம் பயிற்சி பெற்றவர்.
ஆதித்யன் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று மதியம் காலமானார். அவருக்கு வயது 63.
அவரது உடல் நாளை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
இசை அமைப்பாளர் ஆதித்யன் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆதித்யனின் இயற்பெயர் டைட்டஸ். மனைவி பெயர் ஷோபியா. இந்த தம்பதியருக்கு ‌ஷரோன், பிரார்த்தனா என்ற 2 மகள் கள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

“Man has no future without the blessings from nature” – President

Mohamed Dilsad

Ben Stokes charged with affray after Bristol nightclub incident

Mohamed Dilsad

ஜனாதிபதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment