(UTV|COLOMBO)-ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பில், இன்று பகல் 12.00 மணிக்கு, தொழிற்சங்கங்கள், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள அந்த அமைச்சின் ஊடகச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய, அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே, ரயில்வே பொது முகாமையாளர் மஹாநாம அபேவிக்ரம மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு, குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு, தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கோரியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையத் தகவல்களுக்கு அமைய, வௌி மாகாணங்களில் இருந்து கொழும்பிற்கான அனைத்து ரயில் சேவைகளும் வழமை போல் இயங்குவதாக தெரியவந்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]