Trending News

தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

(UTV|COLOMBO)-தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று  (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது.

தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபையானது, இன்று ஒன்பதாவது தடவையாகவும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடியதுடன், கடந்த கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பிரிவெனாக்களுக்கு மேசை, கதிரைகள் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தின் கீழ் பத்தாயிரம் மேசை, கதிரை தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை எதிர்காலத்தில் பிரிவெனாக்களுக்கு விநியோகிக்க முடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், புத்த ஜயந்தி புதிய திரிபீடக நூலின் உருவாக்கம் மற்றும் அச்சுப்பதிப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதன்பொருட்டு புதிய நூலகமொன்றினை நிறுவுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு, நல்லிணக்கம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பிரதேச செயலக மட்டத்தில் சமயக் குழுக்களை நிறுவுவதற்கும் அதன்பொருட்டு சமயத் தலைவர்களினதும் அரச அதிகாரிகளினதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ளல் தொடர்பாகவும் தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை ஒன்றுகூடலில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

வண. பேராசிரியர் கல்லேல்லே, சுமனசிறி நாயக்க தேரர், வண. கலாநிதி அக்குருடியே நந்த தேரர், வண. நாரம்பனாவே ஆனந்த தேரர், வண. திப்பட்டுவாவே ஶ்ரீ மேதங்கர நாயக்க தேரர், வண. பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் உள்ளிட்ட தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினரும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்ரபிரேம கமகே உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

Related posts

வாக்களிக்க விசேட போக்குவரத்து வசதி – விண்ணப்ப முடிவு சனியுடன் நிறைவு

Mohamed Dilsad

Curfew lifted in Chawalakade, Kalmunai, Sammanthurai [UPDATE]

Mohamed Dilsad

Trump: Court defeat on asylum policy ‘unfair to US’

Mohamed Dilsad

Leave a Comment