Trending News

பரீட்சை மண்டபத்தில் வைத்து O/L மாணவர்கள் இருவர் கைது

(UTV|BADULLA)-இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு முறைகேடாக தோற்றிய இரண்டு மாணவர்கள் லுனுகலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுனுகலை மகா வித்தியாலயத்தில் இல 2 பரீட்சை மண்டபத்தில் தனியார் பரீட்சார்த்திகளாக தோற்றிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பரீட்சை இலக்கங்களை மாற்றி பரீட்சை எழுத முற்பட்டுள்ளதாக பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி , குறித்த பாடசாலைக்கு சென்ற காவற்துறையினர் , அடையாள அட்டை மற்றும் பரீட்சை அனுமதி பத்திரங்களை மாற்றி பரீட்சைக்கு தோற்றிய இருவரையும் கைது செய்துள்ளதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

17 மற்றும் 18 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அல்ஜீரிய ஜனாதிபதியை நீக்குமாறு இராணுவத்தளபதி வலியுறுத்தல்

Mohamed Dilsad

ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை

Mohamed Dilsad

යෞවන යෞවනියන් අතර, එච්අයිවී අවධානම ඉහළ ට.

Editor O

Leave a Comment