Trending News

ஆயுதங்களுடன் 11 பேர் கைது

(UTV|COLOMBO)-பண்டாரவளை பிரதேசத்தில் ஆயுதங்களுடன் பயணித்த பாரவூர்தி ஒன்று நேற்று இரவு காவற்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹிக்கடுவை, பலங்கொடை, தியதலாவை, அம்பலாங்கொடை, எல்ல மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரவளை காவற்துறையினர் விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, துப்பாக்கிகளை தாம்வசம் வைத்திருந்த 2 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோமாகமை – பிடிபன மற்றும் மீடியாகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 43 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Delimitation Committee on PCs hands over report

Mohamed Dilsad

2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

Mohamed Dilsad

රාජපක්ෂලා සමඟ යන කිසිවෙකුට සහය නැහැ – පාඨලී චම්පික

Editor O

Leave a Comment