Trending News

கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UTV|COLOMBO)-எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் நியாயமான விலைக்கு தேவையான பொருட்களை நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதிசெய்வதற்காக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபையின் அதிகாரிகள் நாடுமுழுவதிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

நுகர்வேர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபையின் மூலம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் தண்டப்பணங்களும் அறவிடப்பட்டுள்ளன.

இதற்கமைவாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து டிசம்ர் மாதம் 18ஆம் திகதிவரையில் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் மேற்கொள்ப்பட்ட சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை 1756 ஆகும்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட எண்ணிக்கை 1529 ஆகும்.கட்டுப்பாட்டுவிலை விதிக்கப்பட்ட தேங்காய் கருவாடு மற்றும் மைசூர்பருப்பு தொடர்பில் 1250 வர்த்தக நிலையங்களில் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ள விசேட ஊடகஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை சட்டத்திற்கு அமைவாக கீழ்க்குறிப்பிட்ட முற்றுகையின் மூலம் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • அரசாங்கத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆகக்கூடிய சில்லறை விலையிலும் பார்க்க ஆகக்கூடிய விலைக்கு பொருட்களை விற்றல் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்தமை.
  • பொருட்களின் விலை குறிப்பிடுதல் பொதிசெய்தல் மற்றும் கையாளுவது தொடர்பிலான விதிமுறைகளை மீறியமை
  • பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தல்
  • பாவனையாளர்களை இட்டுச்செல்வதற்காக செயற்பட்டமை
  • பொருட்களை விற்பனை செய்ய மறுத்தமை
  • பாவனையாளர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்காமை
  • தகவல்களை குறிப்பிடாமை
  • உரிய தரத்திற்குஅமைவாக பொருட்களை விற்பனை செய்தமை
  • மின்சார உபகரணங்களுக்கு ஆகக்குறைந்தது 6மாதகால உத்தரவாத்ததை உறுதிசெய்யாமை

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பதுரெலிய வித்தியாலயத்தின் கட்டிடமொன்றின் அருகில் 13 கைக்குண்டுகள் மீட்பு

Mohamed Dilsad

Donald Trump eyeing 10% tax cut for middle class

Mohamed Dilsad

“Ready for more value addition for mineral sands” – Minister Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment