Trending News

கிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்

(UTV|KILINOCHCHI)-உள்ளுராட்சி தேர்தல் கிளிநொச்சியில் இன்று(20)  தமிழரசு கட்சி,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி என்பன வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.

 கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி  மன்றங்களான கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று  சபைகளுக்கும் வேட்பு மனுத் தாக்ககல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேசசபைகளுக்குமான வேட்பு மனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசபையில் 21 வட்டார வேட்பாளர்களும், 17 விகிதாசார முறை வேட்பாளர்களும், பூநகரி பிரதேசசபையில் 11 வட்டார வேட்பாளர்களும், 10 விகிதாசார முறை வேட்பாளர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேசசபையில் 8 வட்டார வேட்பாளர்களுமாக மொத்தம் 75 பேர் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறதரனிடம்
ஏற்கனவே கூட்டமைப்பில் இணக்கம் காணப்பட்ட 60 க்கு இருபதுக்கு இருபதுக்கு என்ற இணக்கம் கிளிநொச்சியில் எட்டப்படவில்லை என்பதனால் புளட் தேர்தலில் இருந்து வெளியேறியுள்ளது தொடர்பில் வினவிய போது அது தொடர்பில்தான் பதிலளிக்க முடியாது எனவும், அதனை புளட் அமை்பிடம் கேட்டுக்கொள்ளுமாறு பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கருத்து தெரிவித்த அதன் மாவட்ட அமை்பபாளர் ஜெகதீஸ்வரன் இந்த உள்ளுராட்சி தேர்தலில் ஊழல் அற்ற சிறந்த உள்ளுராட்சி சபைகளை ஏற்படுத்தவும், அடிப்படையில் இருந்தே நல்லாட்சியை உருவாக்கவும் தாங்கள் மூன்று உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

நிலாவுக்கு செல்லும் முதல் பெண்

Mohamed Dilsad

17 மாணவர்களை கொடூரமாக கொலை செய்த மாணவனின் அதிர்ச்சி பின்னணி

Mohamed Dilsad

இலங்கை – பங்களாதேஷுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

Mohamed Dilsad

Leave a Comment