(UTV|COLOMBO)-உலகளாவிய ரீதியில் நாடுகள் டிஜிட்டல் மயமாகிய வண்ணமுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகித்து, பெறுமதி சங்கிலித்தொடர்கள் துரித வளர்ச்சியை எய்திய வண்ணமுள்ளன. இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA),2017ல், சமூகத்தின் சகல பிரிவுகளுக்கும் டிஜிட்டல் வலுவ10ட்டலை பெற்றுக்கொடுக்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கலை பின்பற்றியிருந்தது.
அத்தியாவசிய துறைசார் பங்காளர் எனும் வகையில், 2030ல் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு (ICTA) முக்கிய பங்கை வழங்கி வருகிறது. அத்துடன், நாட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கட்டமைப்பில் முக்கிய பங்கை வகிக்கும் வகையில், வறுமை ஒழிப்பு, சமூக-பொருளாதார வளர்ச்சி,கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிபுணர்கள், இளைஞர்களுக்கான தொழில் உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்றவற்றில் தகவல் தொழில்நுட்பத்தை உள்வாங்குவதில் பங்காற்றி வருகிறது.
2015 – 2020 நாட்டின் தூரநோக்குடைய சிந்தனையின் பிரகாரம், தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரு பிரதான துறைகளாக தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஆகியன இனங்காணப்பட்டிருந்தன. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசத்துக்கு பங்களிப்பு வழங்குவதுடன், சகல மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
(ICTA)வின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. அஜித் மதுரப்பெரும கருத்துத்தெரிவிக்கையில்,“(ICTA) இனால் பல முன்னணி நிகழ்ச்சித்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, 2018லும் பல புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். இவற்றினூடாக இலங்கையர்களை டிஜிட்டல் உள்வாங்கலுக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கும். தகவல் மற்றும் அறிவை மூலங்களாக பயன்படுத்திய (ICTA)செயற்திட்டங்கள், டிஜிட்டல் சாதனங்களினூடாக ஆளுகை மற்றும் சேவைகளை மேம்படுத்தி சகல குடிமக்களுக்கும் வளர்ச்சியையும் அபிவிருத்தி வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.
வறுமை ஒழிப்பினூடாக கிராமிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதற்காக(ICTA) வின் ஸ்மார்ட் சமூக வட்டம் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. குடிமக்களுக்கு வலுவ10ட்டும் வகையில் (ICTA) இனால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் சமூக வட்டம் நிகழ்ச்சி நாடு முழுவதிலும் அறிவார்ந்த, அனுபவம் வாய்ந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த குடிமக்களை உருவாக்கியுள்ளது. இதனூடாக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சமூக ஊடக வலைத்தளங்களின் பாவனையை ஊக்குவித்து, அவர்களுக்கு டிஜிட்டல் அறிவை பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.
இதுவரையில்,8000க்கும் அதிகமான அறிவார்ந்த முகவர்கள் 800 கிராம சேவகர் பிரிவுகளில் மக்களுக்கு வழிகாட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இணையத்தினூடாக பாவனையாளர்களுக்கு நட்பான தகவல் மற்றும் நல்லாட்சி தொடர்பான சேவைகள், மக்கள் ஊடகவியல் மற்றும் அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]