(UTV|COLOMBO)-அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இந்த விடயம் பரிசீலிக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் ஒரு கிலோ நாட்டசிரியின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 74 ரூபாவாகும். எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் நுகர்வோருக்கு நிவாரண விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக சதொச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊடாக அரிசியை இறக்குமதி செய்வதென குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தேவையேற்படும் பட்சத்தில் ஏனைய வகை அரிசிகளுக்கும், உயர்ந்தபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிட்டுள்ளார்;. கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]