Trending News

8.4 சதவீதமாக குறைவடைந்துள்ள பணவீக்கம்

(UTV|COLOMBO)-தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் வருட பணவீக்கமானது 2017 ஒக்டோபர் மாதத்தில் 8.8மூ இருந்து நவம்பர் மாதத்தில் 8.4மூ ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017 நவம்பர் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.சு.) தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைகளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,

 

2016 நவம்பர் மாதத்தில் ஒப்பீட்டளவில் நிலவிய குறைந்த விலை மட்டங்கள் குறிப்பாக தேங்காய், அரிசி, மரக்கறி ஆகியவற்றில் நிலவிய குறைந்த விலைகள் 2017 நவம்பர் மாதம் பொருட்டு பதிவாகிய பணவீக்கத்திற்கு பிரதான காரணமாக அமைந்தன. 2017 நவம்பர்; மாதத்தில் உணவு மற்றும் உணவல்லாப் பிரிவுகளிலிருந்து பணவீக்கத்திற்கான பங்களிப்புகள் முறையே 6.9%, 1.5% ஆக இருந்த அதேவேளை, 2016 நவம்பர் மாதத்தில் உணவு விலைகளில் ஒப்பீட்டுரீதியாக நிலவிய குறைந்த விலைகளை பிரதிபலித்த 4.1% முதன்மைப் பணவீக்கத்தின் பெறுபேறாக 2016 நவம்பர் மாதத்தில் பணவீக்கத்திற்கான இந்த இரு பிரிவுகளிலினதும் பங்களிப்புகள் முறையே 0.7%, 3.4% ஆக காணப்பட்டன.

 

இருப்பினும், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்(தே.நு.வி.சு.) மாதம் மீது மாத மாற்றங்களை ஒப்பிடுகையில் 2017 ஒக்டோபர் மாதத்தில் பதிவாகிய 124.8 இருந்து 2017 நவம்பர் மாதத்தில் 126.4 ஆக அதிகரித்துள்ளது. இது, 2017 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 நவம்பர் மாதத்தில் 1.6 சுட்டெண் புள்ளிகள் அல்லது 1.3 சதவீத புள்ளிகள் அதிகரிப்பொன்றைக் காட்டுகிறது. இந்த மாதம் மீது மாத மாற்றத்திற்கான காரணம், உணவுப்பொருட்களின் செலவுப் பெறுமதி 0.95% இனாலும் உணவல்லாப்பொருட்களின் செலவுப் பெறுமதி 0.30%இனாலும் அதிகரித்தமையேயாகும்.

 

உணவுப்பொருட்களின் செலவுப் பெறுமதியின் அதிகரிப்புக்குக் காரணம் தேங்காய், பச்சை மிளகாய், மரக்கறி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், அரிசி, முட்டை மற்றும் தேயிலைத் தூள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்தமையேயாகும். எனினும், சுட்டெண்ணில் குறைந்த செலவுப் பெறுமதிகள் புதிய மீன், வாழைப்பழம், உருளைக்கிழங்கு, பப்பாசிப்பழம், எலுமிச்சம்பழம், மாம்பழம், கருவாடு, மைசூர் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் என்பன பொருட்டு பதிவாகின.

 

முந்திய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 நவம்பர் மாதத்தில் உணவல்லாப்பொருட்களின் செலவுப் பெறுமதியின் அதிகரிப்புக்குக் காரணம், ‘சுகாதாரம்’, ‘நானாவிதப் பொருட்களும் சேவைகளும்’, ‘பொழுதுபோக்கும் கலாசாரமும்’, ‘போக்குவரத்து’, ‘ஆடையும் காலணியும்’, ‘தளபாடம், குடித்தன உபகரணம் மற்றும் வழமையான குடித்தன பராமரிப்பு’ மற்றும் ‘வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு, ஏனைய எரிபொருள்கள்’ ஆகிய பிரிவுகளில் ஏற்பட்ட செலவுப் பெறுமதியின் அதிகரிப்பேயாகும். மேலும், முந்திய மாதத்துடன் ஒப்பிடுகையில் ‘உணவகமும் ஹோட்டல்களும்’ ஆகிய பிரிவு பொருட்டு செலவுப் பெறுமதியில் ஓரளவு சற்று அதிகரிப்பு பதிவாகியது. எனினும், சுட்டெண்ணில் குறைந்த செலவுப் பெறுமதி ‘அற்ககோல் பானங்கள், புகையிலை மற்றும் தியக்கமருந்துகள்’ ஆகிய பிரிவு பொருட்டு பதிவாகியது. ‘தொடர்பாடல்’ மற்றும் ‘கல்வி’ ஆகிய பிரிவுகளின் செலவுப் பெறுமதியில் இம்மாதம் மாற்றம் எதுவும் காணப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Interim Order issued on garbage containers

Mohamed Dilsad

රියදුරු බලපත්‍රය වෙනස් කිරීමේ තීරණයක්

Editor O

விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்

Mohamed Dilsad

Leave a Comment