Trending News

தீரன் பட பாணியில் யாழில் நடந்த கொடூர சம்பவம்!!

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்தவர்கள் வயது பாராபட்சமின்றி நித்திரையிலிருந்தவர்களை தாக்கியதுடன் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலையில் முகத்தை முழுமையாக மறைத்துக்கொண்டு 7 முதல் 8 அங்கத்தவர்கள் அடங்கிய குழுவொன்று வீடொன்றின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்துள்ளனர்.

ஆழ்ந்த நித்திரையிலிருந்தவர்களை பொல்லால் தாக்கியதோடு எதிர்த்தவர்களை வாளால் வெட்டியுள்ளனர்.

அனைவரையும் கூரிய ஆயுதங்களால் அச்சுறுத்திய குறித்த குழு 15 பவுன் தங்க ஆபரணங்களையும், ஒரு லட்சம் ரூபா பணத்தினையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் செல்வநாயகம் மற்றும் பிரபாகரன் என அழைக்கப்படும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சங்கானை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த குழுவின் பயன்படுத்தி துவிச்சக்கர வண்டி மற்றும் பாதணிகள் விட்டுச்செல்லப்பட்டுள்ளதாகவும், அவற்றை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளதோடு முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டுரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

Mohamed Dilsad

රටට සහ සංස්කෘතියට නොගැලපෙන ලිංගික අධ්‍යාපනයක් හයේ පොතට දාලා..- අගරදගුරු

Editor O

100 படங்கள் நடித்த பிறகே திருமணம்

Mohamed Dilsad

Leave a Comment