Trending News

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம்

(UTV|COLOMBO)-இலங்கை போக்குவரத்து சபையின் சகல பஸ் வண்டிகளிலும் GPS தொழில்நுட்பம் பொருத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பஸ் வண்டிகளுக்கு GPS தொழில்நுட்பத்தைப் பொருத்தி மத்திய கட்டுப்பாட்டு நிலையத்தின் ஊடாக பஸ் வண்டிகளை நிர்வகிக்க முடியும். இதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டிகளை சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊழியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்துச் சபை முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக திறைசேரியின் அனுமதியுடன் 30 ஆயிரம் ரூபா போனஸ் கொடுப்பனவு வழங்க முடிந்ததாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை

Mohamed Dilsad

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நிறைவு

Mohamed Dilsad

Cloudy skies, showers expected today

Mohamed Dilsad

Leave a Comment