Trending News

கோலிக்கு நேர்ந்த கதி

(UTV|INDIA)-இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடல் கலந்து கொள்ளாத விராட் கோலி ஐ.சி.சியின் இருபதுக்கு 20 துடுப்பாட்ட தரவரிசையில் 3 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

எனினும் தொடர்ந்து டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இரண்டாவது இடத்திலும், ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் முதலாவது இடத்திலும் உள்ளார்.

தனது திருமணம் காரணமாக இந்த போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திய இந்திய அணியின் வீரர் லோகேஸ் ராஹூல் துடுப்பாட்ட தரவரிசையில் 23 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், ரோஹித் சர்மா 6 இடங்கள் முன்னேறி 14 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக தமது திறமையை வெளிப்படுத்திய இந்திய பந்து வீச்சளர்களான சஹால், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் பந்து வீச்சு தரப்படுத்தலில் முன்னேறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை அணியின் வீரர்களான குசல் பெரேரா இருபதுக்கு 20 துடுப்பாட்ட தரப்படுத்தலில் 8 இடங்களும், உப்புல் தரங்க 36 இடங்களும் முன்னேறியுள்ளனர்.

மேலும் இருபதுக்கு 20 பந்து வீச்சு தரப்படுத்தலில் இலங்கை அணியின் வீரர் திஸர பெரேரா இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

Mohamed Dilsad

பிரச்சினையால் விவாகரத்து வரை சென்ற நடிகர் விஜய் சேதுபதி…

Mohamed Dilsad

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்

Mohamed Dilsad

Leave a Comment