Trending News

நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுடனான சந்திப்பு- (படங்கள்)

(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில்  கம்பஹா மாவட்டத்தின், நீர்கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (25) நீர்கொழும்பு சோண்டர்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபை முதன்மை வேட்பாளருமான இஹ்ஷான் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

இதன்போது, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் உபாயங்கள், தேர்தல் முன்னெடுப்புக்கள் மற்றும் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது.

இதேவேளை, நீர்கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வர்த்தக சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள், சிவில் சமூகம் என்பன அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ், கட்சியின் முக்கியஸ்தர் முஹாஜிரீன் மாஸ்டர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/12/R-1-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/12/R-2-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/12/R-3-1.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

 

 

Related posts

President to hold talks with Georgian counterpart tomorrow

Mohamed Dilsad

“Government will move forward without fear of challenges, criticisms” – President

Mohamed Dilsad

කාලගුණයෙන් රතු නිවේදන: ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස රැසකට අනතුරු ඇඟවීම්

Editor O

Leave a Comment