Trending News

ரகசிய திருமணம் செய்து கொண்ட இலியானா…

(UTV|INDIA)-ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் பிரபலமாக இருந்த இவர் இந்தி பட உலகுக்கு சென்றார்.

இலியானா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரு நிபோனை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் இலியானாவும் ஆன்ட்ருவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை இலியானா தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் மரம் அருகே நிற்கும் படத்தை வெளியிட்டு அதில் “வருடத்தில் எனது இனிய நேரம் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் விடுமுறை. வீடு, காதல், குடும்பம். புகைப்படம் எடுத்தது கணவர் ஆண்ட்ரு நிபான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

திருமணமும், ‘லிவ்இன்’ பந்தமும் வெவ்வேறு என்று நான் நினைக்கவில்லை. ஒரு பேப்பர் தான் வித்தியாசம். ஆன்ட்ரு மீதான என் காதல் ஒரு போதும் மாறாது’ என்று இலியானா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இப்போது காதலரை கணவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால் இலியானா ரகசிய திருமணம் செய்து கொண்டது உறுதியாகி இருக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

101 Fishermen apprehended for engaging in illegal fishing practices

Mohamed Dilsad

“No power crisis at present” – Minister Ranjith Siyambalapitiya

Mohamed Dilsad

குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த தந்தை

Mohamed Dilsad

Leave a Comment