Trending News

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு – மூன்றாம் கட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் நேற்று ஆரம்பமானதாக திறைசேரி அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு வரை வருடாந்தம் 2500 ரூபா என்ற வரம்புக்கு உட்பட்டு நான்கு கட்டங்களாக அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமகால அரசாங்கம் தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் 14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் ஆரம்பத்தில் 2500ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படாமல் இடைக்காலக் கொடுப்பனவாக வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டு தொடக்கம் 2500 ரூபா சம்பளத்தில் சேர்க்கப்பட்டது.

இதேவேளை அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய அனுகூலங்களும் அதிகரிப்பதாக திறைசேரி அறிவித்துள்ளது. இது தவிர மேலதிக வேலை நேரத்திற்கான கொடுப்பனவும் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Ethiopian woman gives birth and sits exams 30 minutes later

Mohamed Dilsad

නියෝජ්‍ය කථානායක ඇතුළු සෙසු තනතුරුවලට පත්වූවෝ

Editor O

Leave a Comment