Trending News

பிரேசில் சிறையில் பயங்கர மோதல்

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டில் உள்ள சிறைகளில் கொலை, கொள்ளை, கடத்தல், போதை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதே நேரத்தில் சிறைகளில் போதுமான பணியாளர்கள் இல்லை.

இந்த நிலையில் அங்கு கோய்யாஸ் மாகாணத்தின் தலைநகரான கோய்யானியாவையொட்டியுள்ள கிராமப்புற சிறையில் நேற்று முன்தினம் மதியம் புத்தாண்டு தின கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு ஏராளமான ஆயுதங்களை கொண்டுள்ள கைதிகள் கும்பல், எதிர்கும்பலுடன் சண்டை போட்டது. இந்த சண்டையின் போது துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது.

இதில் 9 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாயினர். 14 கைதிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தெறிந்தனர்.

இந்த மோதலைப் பயன்படுத்தி இரு தரப்பையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பினர். அவர்களில் 30 பேர் மீண்டும் பிடிபட்டனர். 80 பேர் தலைமறைவாக உள்ளனர். படுகாயம் அடைந்த கைதிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த மோதல் குறித்து தகவல் அறிந்ததும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் குடும்பத்தினர்களும், உறவினர்களும் சிறைக்கு வெளியே குவிந்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்து துணை கர்னல் ஹிருல்னர் பிரகா அனனியாஸ் என்ற அதிகாரி கூறும்போது, “இரு கைதிகள் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் இது. தற்போது இது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது” என்று குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அபயராமய விகாரையில் அரசியலுக்குத் தடை

Mohamed Dilsad

பேராசிரியர் காலோ பொன்சேகா காலமானார்

Mohamed Dilsad

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை…

Mohamed Dilsad

Leave a Comment