Trending News

வவுனியா வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில்

(UTV|VAVUNIYA)-வவுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக வவுனியா வர்த்தக சங்கம் இன்றும் வியாபார நிலையங்களை மூடி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அது மூடப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 147 வர்த்தக நிலையங்களை மூடிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

பஸ் நிலையம் மூடப்பட்டதனால் பொது மக்கள் அப்பகுதிக்கு வருவதில்லை என்றும், இதனால் வியாபார நிலையங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வுனியா பழைய பஸ் நிலையம் மூடப்பட்டதை எதிர்க்கும் நோக்கில் அப்பகுதி வர்த்தகர்கள் கடந்த 01ம் திகதி முதல் கறுப்புக் கொடி ஏற்றி வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பை வௌிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தையடுத்து போக்குவரத்துச்சபை தலைமைக் காரியலாயத்திலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு இன்று விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுனியா புதிய பஸ்நிலையத்திற்கு விஜயம் செய்யும் மேற்படி குழவினர் பஸ்நிலையத்தைப் பார்வையிடுவதுடன் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் விசேட பேச்சுவார்த்தைகள் ஈடுபடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Prof. Carlo Fonseka hospitalized

Mohamed Dilsad

සමගි ජනබලවේගය පිහිටුවීමේ අරමුණ ඩීල් දේශපාලනය අවසන් කිරීමයි.

Editor O

Trump’s blocked travel ban, blocked again

Mohamed Dilsad

Leave a Comment