Trending News

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக சாலையின் களனி பாலத்திற்கு அருகில் களனி மற்றும் வத்தளை பகுதிகளில் வாகனங்கள் வௌியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதியை இம்மாதம் 10ம் திகதி தொடக்கம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்காக இந்த வீதி மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலாக மாற்றுவீதிகளை அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து களனி மற்றும் பெஹலியகொடை நோக்கி பயணிப்பதற்காக பெஹலியகொடை வௌியேறும் பகுதியில் இருந்து கண்டி கொழும்பு வீதிக்கு பிரவேசிக்க முடியும்.

அதேபோல் , கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து வத்தளை மற்றும் பெஹலியகொடை நோக்கி பயணிப்பதற்காக பெஹலியகொடை வௌியேறும் பகுதியின் ஊடாக கொழும்பு – நீர்க்கொழும்பு வீதிக்கு பிரவேசிக்க முடியும்.

மற்றும் , கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வழமைப்போல் பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Premier assures to solve fuel price problem

Mohamed Dilsad

Wimal appointed Housing, Social Welfare Minister

Mohamed Dilsad

Speaker informs President on No-Confidence Vote held today

Mohamed Dilsad

Leave a Comment