Trending News

பொங்கலுக்கு வருகிறார் விக்ரம்

(UTV|INDIA)-விக்ரம் நடிப்பில் வடசென்னையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் தணிக்கைக் குழுவில் `யு/ஏ’ சான்றிதழை பெற்றுள்ளது. இதையடுத்து படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ஆம் திகதி  ரிலீசாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

`வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ், சூரி, அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீ பிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
எஸ்.எஸ்.தமன் இசையில் ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, பிரபுதேவாவின் `குலேபகாவலி’, அரவிந்த் சாமியின் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ மற்றும் சண்முகபாண்டியனின் `மதுர வீரன்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

FORMER WARAKAPOLA CHAIRMAN GIVEN SUSPENDED JAIL SENTENCE

Mohamed Dilsad

புதிய இராணுவ தளபதி நியமனம்

Mohamed Dilsad

அய்ஸ் என்ற போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment