Trending News

ஓவியாவுடன் திருமணமா?

(UTV|INDIA)-‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பிறகு மிகவும் பிரபலமானவர் ஓவியா. சமீபத்தில் புத்தாண்டு தினத்தை யொட்டி, சிம்பு எழுதி இசை அமைத்து பாடிய ‘மரண மட்டை’ இசை ஆல்பத்தில் ஓவியாவும் சிம்புவுடன் சேர்ந்து பாடி இருந்தார்.

இதையடுத்து, இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படங்கள் இணையதளத்தில் வெளியாகின. இதனால் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும், ஓவியாவை சிம்பு திருமணம் செய்து கொண்டதாகவும், வதந்திகள் பரவின. இது ‘கிராபிக்ஸ்’ படம் என்பது தெரியவந்தது.

என்றாலும், இருவருக்கும் திருமணம் நடந்து இருக்குமா? என்ற சந்தேகம் நீடித்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளை யொட்டி தொலைக்காட்சியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஓவியா தோன்றினார். அப்போது அவரிடம் ஓவியா-சிம்பு திருமண புகைப்படம் பற்றி கேட்கப்பட்டது. இதற்கு ஓவியா, “அது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி” பதில் அளித்தார்.

அப்போது அந்த நிகழ்ச்சிக்கு போன் செய்த சிம்பு, “எனக்கும் ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து… திருமணமே முடிந்து விட்டது” என்று சிரித்தபடியே கிண்டலாக பதில் சொன்னார். இதன் மூலம் அப்படி எதுவும் நடக்க வில்லை என்பதை உறுதி செய்தார். இதன் மூலம் இவர்கள் திருமண வதந்திக்கு சிம்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Sri Lanka Navy facilitates repatriation of 3 Indian fishermen

Mohamed Dilsad

மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று

Mohamed Dilsad

சரத் அமுனுகம தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை

Mohamed Dilsad

Leave a Comment