Trending News

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு விலைமனுக் கோரலூடாக 21 பஸ்கள் தேர்வு

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கு விலைமனுக் கோரலூடாக 21 பஸ் வண்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் 19 ஆம் திகதியளவில் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளாவிடின் அந்த பஸ்களுக்கான அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து அனுமதி கிடைக்கப் பெறாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.

போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் தொடர்பில் தேசிய பயணிகள் அதிகார சபைக்கு பஸ் கொண்டு வந்து காண்பிப்பது கட்டாயமாகும்.

05 வருடங்களுக்கான அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

140 பஸ்கள் அளவில் இதுவரை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்திற்காக நிரந்தர அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளதுடன் அவற்றில் 43 பஸ்கள் தற்காலிக அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ளன.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது

Mohamed Dilsad

ஐ என் ஏ கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Mohamed Dilsad

Batticaloa Airport unveiled for civil aviation

Mohamed Dilsad

Leave a Comment