Trending News

இலங்கையின் பெரும்பாக பொருளியல் நிலவரம் நிலையாக உள்ளது – சர்வதேச நாணய நிதியம்

(UTV|COLOMBO)-இலங்கையின் பெரும்பாக பொருளியல் மற்றும் நிதி நிலவரம் நிலையான மட்டத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளும், அரச வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பும், ஒதுக்கங்கள் மேம்பட்டமையும்வளர்ச்சிக்குரிய பிரதான காரணிகளென நிறுவனத்தின் பதில் தலைவர் மிட்சுஹிரோ புரசாவா (Mitsuhiro Furusawa) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வொஷிங்டன் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் திரு.மிட்சுஹிரோ இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சர்வதேச அமைப்பின் மூலம் இலங்கைக்கு மேலும் 25 கோடி டொலருக்கு மேலான தொகையை வழங்க அனுமதி கிடைத்துள்ளது. சிறந்த கொள்கைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்த அடைவு மட்டத்தை நெருங்குவதற்கு இலங்கையால் முடிந்தது என்றும் நிதியத்தின் பதில் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Mirijjawila protest: 25 further remanded, 4 out on bail

Mohamed Dilsad

ලොකු ලූණු මිල අහසට ළංවෙයි.

Editor O

Door opens for first black James Bond

Mohamed Dilsad

Leave a Comment