(UTV|COLOMBO)-சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கை ஜனாதிபதி செயலக காரியாலய இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை 34 பிரதான அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பல்வேறு கோணங்களில் தமது விசாரணைகளை மேற்கொண்டது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிதி நடவடிக்கை, பெர்ப்பேச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள், சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுப்பனவுகள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன மகேந்திரன் வகித்த பங்கு, அவருடைய மருமகனான அர்ஜூன் அலோசியஸின் கையடக்க தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஊடாக குற்ற புலனாய்வு திணைக்களம் தயாரித்த அறிக்கை, பெர்ப்பேச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனம் குறித்த காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட இலாபம், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தின் ஊடாக அடைந்த நட்டம் என்ற பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
அந்த அறிக்கையின் ஊடாக, 2014ஆம் ஆண்டு முதல் பகுதியில் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்த பெர்ப்பேச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனம் அந்த வருடத்தின் மார்ச் மாதம் 31ஆம் திகதி நிறைவடைந்த நிதியாண்டிற்குள் 3.7 மில்லியன் ரூபா நட்டமடைந்ததாக பிணைமுறி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பமான அடுத்த நிதியாண்டில் 959.5 மில்லியன் ரூபா சுத்த லாபமாக பெற்றுக்கொண்டது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமான நிதியாண்டில் 5.124 மில்லியன் ரூபா நிகர லாபமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற முதல் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகத்தின் ஊடாக 68 கோடியே 85 லட்சத்து 62 ஆயிரத்து 100 நட்ட ஏலத்தில், அர்ஜூன மகேந்திரன் தலையிடாமல் இருந்திருந்தால் நட்டத்தை தவிர்த்திருக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குற்ற புலனாய்வு திணைக்களம் வழங்கிய அறிக்கையின் படி, நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் அலோசியஸூக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த பதவியின் பொருட்டு வெளிநாட்டவர் ஒருவரை நியமித்தமை தொடர்பில் பிரதமர் வழங்கிய விளக்கம் தொடர்பிலும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]