Trending News

குரக்கனில் தயாரிக்கப்பட்ட சமபோஷ நியுட்ரி ப்ளஸ் சந்தையில் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கையர்கள் விரும்பும் காலை உணவு வேளையான சமபோஷ,தனது புதிய நியுட்ரி பிளஸ் தயாரிப்பை குரக்கன் கொண்டு தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் சிறியவர்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யம் பெற்றிருந்த நியுட்ரி ப்ளஸ் தெரிவுகள், தற்போது பெரியவர்களுக்கும் பொருத்தமான வகையில் குரக்கனில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக தேசத்தின் போஷாக்குக்கு வலுச்சேர்க்கப்பட்டுள்ளது. சமபோஷ நியுட்ரி ப்ளஸ் குரக்கன் தெரிவு,200 கிராம் மற்றும் 500 கிராம் ஆகிய பொதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான உணவுகளை உண்ண விரும்பும் இலங்கையின் வேலைப்பளு நிறைந்தவர்களுக்கு சிறந்த உணவுத்தெரிவாக அமைந்துள்ளது.

சமபோஷ நியுட்ரி பிளஸ் குரக்கன் பிளென்டி ஃபுட்ஸ் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தியாக அமைந்துள்ளது. சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட்ன் துணை நிறுவனமாக பிளென்டி ஃபுட்ஸ் பிரைவட் லிமிட்டெட் திகழ்கிறது. புதிய சமபோஷ நியுட்ரி ப்ளஸ் தயாரிப்பில், சோளம், சோயா, குரக்கன் மற்றும் சிவப்பரிசி ஆகியன அடங்கியுள்ளதுடன், இந்த சேர்மானங்கள் விற்றமின்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்ததாக அமைந்துள்ளன.

தமது உடற்பருமனை குறைத்துக்கொள்வது,கொலஸ்ரோலை கட்டுப்படுத்திக்கொள்வது மற்றும் முக்கியமாக நீரிழிவை கட்டுப்பாட்டில் பேணுவதற்கு போன்றவற்றுக்கு குரக்கன் சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. எலும்புகளை வலிமையாக்குவதுடன், உணவுச்சமிபாட்டையும் ஊக்குவிக்கிறது. பாலூட்டும் தாய்மாருக்கும் தமது பால் செறிவை அதிகரித்துக்கொள்ள சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. அனீமியா ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பதுடன், இளமையான சருமத்தை பேணவும் உதவியாக குரக்கன் அமைந்துள்ளது.

பிளென்டி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரட்ன கருத்துத்தெரிவிக்கையில், “எமது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவதில் இது முக்கிய பங்கை வகிக்கும். சமபோஷ நியுட்ரி ப்ளஸை சீரியலாக அல்லது லட்டாக தயாரித்துக்கொள்ள முடியும். இந்தத்தயாரிப்பில் காணப்படும் குரக்கன், வயது வந்தவர்களுக்கும், கட்டிளமைப்பருவத்தைச்சேர்ந்தவர்களுக்கும் ஆரோக்கியமான தேக நிலையை பேண உதவியாக அமைந்திருக்கும். இந்த புதிய தயாரிப்பின் அறிமுகத்துடன் எமது விவசாயிகள் அனுகூலம் பெறுவதுடன், விவசாயிகளுக்கு நாம் வழங்கும் உதவிகளை மேம்படுத்தவும் ஏதுவாக அமைந்திருக்கும்” என்றார்.

நியுட்ரி ப்ளஸ் குரக்கனில் அடங்கியுள்ள சேர்மானங்கள் 100மூ இயற்கையானவையாக அமைந்துள்ளதுடன், நுகர்வோருக்கும்ää விவசாயிகளுக்கும் பயனை வழங்குவதாக அமைந்துள்ளன. மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட விலையை வழங்குவதற்கு நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இதன் காரணமாக உயர் தரம் வாய்ந்த விளைபொருட்களை அவர்களிடமிருந்து நிறுவனம் பெற்று வருகிறது. சிபிஎல் நிறுவனத்தின் இந்த விவசாயிகள் நலன் கட்டமைப்பில் 8500க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் இணைந்துள்ளனர். இதனூடாக நாட்டின் பின்தங்கிய பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை நிறுவனம் வழங்குகிறது. கூட்டாண்மை நலன்புரி நிகழ்ச்சியினூடாக சமபோஷ விவசாய சமூகத்துக்கு பல்வேறான அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன. இதில் வரட்சியான காலநிலையின் போதும், வெள்ள அனர்த்தங்களின் போது அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு அவசியமான உதவிகள் வழங்கப்படுகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

‘Brightburn’ was a great help to me: James Gunn

Mohamed Dilsad

පොසොන්පුර පසළොස්වක පොහොය දින අදයි

Mohamed Dilsad

UNESCO-APEID MEET CINCHES LANDMARK “TRINCOMALEE DECLARATION”

Mohamed Dilsad

Leave a Comment