Trending News

பாகிஸ்தான் இராணுவ பதவிநிலை அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வர் முப்படைத் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதிச் செயலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

 

இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் அழைப்பை ஏற்று நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி  இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் இவ்விரு நாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாகிஸ்தான் அரசாங்கம் அவரசகால தேவைகளில் போது இலங்கையில் சேவையை வழங்க காத்திருப்பதனைக் குறித்து நன்றிகளைத் தெரிவித்ததுடன் ஆசியாவின் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேம்படுத்தல் தொடர்பான கருத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

இந்த நிகழ்வில் பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்மை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் ஜனாதிபதியும் நினைவுச்சின்னத்தை வழங்கினார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் ஸ்தானிகரான வைத்தியர் ஷாஹிட் அகமட் ஹஸ்மத் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் சஹ்ஜாத் அலி போன்றோர் கலந்து கொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Ceylon Workers Congress to support Sajith

Mohamed Dilsad

கலா ஓயா பெருக்கெடுப்பினால் போக்குவரத்து பாதிப்பு

Mohamed Dilsad

Olympic cyclist injured in car crash

Mohamed Dilsad

Leave a Comment