Trending News

மெக்சிகோ நாட்டில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ரெயில்

(UTV|MEXICO)-மெக்சிகோ நாட்டின் கடேபெக் நகரில் ரெயில் தடம்புரண்டு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோ நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கடேபெக் நகரில் நேற்று கன்சாஸ் நகரிலிருந்து வந்த ரெயிலானது திடீரென தடம் புரண்டது. இதனால், ரெயில் பெட்டிகள் தாறுமாறாக கவிழ்ந்தன. ஒரு பெட்டி அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Suicide blast targets Sikhs in Afghan City

Mohamed Dilsad

இலங்கை ரூபா பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

Mohamed Dilsad

படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

Mohamed Dilsad

Leave a Comment