Trending News

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

(UTV|COLOMBO)-ஈழத்து பொப்பிசை சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ஏ.ஈ.மனோகரன் (73)  சென்னையில் நேற்று காலமானார்.

சுகயீனம் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோதே சிகிச்சை பலனளிக்காது காலமானார்.

இவரது பூதவுடல் கலைத்துறையினர் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  இறுதிக்கிரியைகள் நாளை (24) புதன்கிழமை நடைபெறவுள்ளது.

‘சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா’ என்ற பாடல் மூலம் ஈழத்தில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்று மக்கள் மனதில் குடிகொண்டவர் இவராவார்.

ஏ.ஈ.மனோகரன் 1965 இல் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட பாசநிலா ,  1975ல் புதியகாற்று , 1978 இல் வாடைக்காற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழ்நாடு திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 3 வருடங்களிலும், கல்லூரியில் நடத்தப்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

பின்னர் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்திலும் சுமார் 75 இற்கு மேற்பட்ட படங்களில் நடித்த பெருமை இவருக்குண்டு. இவர் இறுதியாக ஜேஜே படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அத்துடன் திரைப்படங்கள் மட்டுமன்றி அத்திப்பூக்கள், திருமதி செல்வம்,அஞ்சலி போன்ற இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். சுராங்கனி பாடலை இந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், தமிழ், மலே, போத்துக்கீசு ஆகிய 7 மொழிகளில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Ewan McGregor is Christopher Robin in Winnie the Pooh movie

Mohamed Dilsad

விழிநீர் அஞ்சலிக்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

Mohamed Dilsad

Prime Minister’s Office refutes news on IGP

Mohamed Dilsad

Leave a Comment