Trending News

சிங்கப்பூர் -இலங்கை இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான, இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்டத நிகழ்வில், ஜனாதிபதி, பிரதமர், சிங்கப்பூர் பிரதமர், ஆகியோர் முன்னிலையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கைக்கு அமைய, சிங்கப்பூர் மற்றும் இலங்கை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சந்தைகளில் பல துறைகளில் அதிக அனுகூலங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் 80 பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படவுள்ளது.
இதனுடாக வரித்துறையினர், ஒவ்வொரு வருடமும் சுமார் 10 மில்லியன் டொலர்களை வரியாக சேமிக்க முடியும் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அத்துடன், குறைந்த வரிச் சலுகையில் சிங்கப்பூரியிலிருந்து தரமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இந்த உடன்படிக்கை மூலம்  வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Paris Hilton’s father unable to reach her

Mohamed Dilsad

இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள்

Mohamed Dilsad

GPS, CCTV monitoring systems to be provided for each train station: Minister

Mohamed Dilsad

Leave a Comment