Trending News

கிறிஸ் கெயிலுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்

(UTV|WEST INDIES)-மூன்றாவது முறையான ஏலத்தில் பஞ்சாப் அணி கிறிஸ் கெயிலை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இதையொட்டி வீரர்களின் இரண்டு நாள் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது.
11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நிறைவு பெற்றது.

மொத்தம் 169 வீரர்கள் ரூ.431.70 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.

ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 20 சதங்கள் விளாசிய ஒரே வீரர், சிக்சர் மன்னன் என்று புகழப்படும் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லின் பெயர் நேற்று முன்தினம் வாசிக்கப்பட்ட போது எல்லா அணிகளும் அமைதி காத்தன.

இதனால் அவர் விற்கப்படாத வீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.பி.எல்.-ல் 5 சதங்கள் அடித்துள்ள கெய்ல், 265 சிக்சர்களும் நொறுக்கியுள்ளார். 38 வயதான கெய்ல், சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட சரியாக ஆடவில்லை. இதன் தாக்கமோ என்னவோ, எந்த அணியும் அவரை சீண்டவில்லை என பார்க்கப்பட்டது.

நேற்று காலை இரண்டாவது முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயிலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
மூன்றாவது முறையில் அவருக்கு யோகம் அடித்தது. மூன்றாவது முறை ஏலத்திற்கு வந்தபோது அவருக்கு எந்தஒரு போட்டியும் காணப்படவில்லை. அவருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை விலையிலே ரூ. 2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான (154 விக்கெட்) இலங்கை அணியின் வீரர் லசித் மாலிங்கவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பறவைகளால் விமானம் தரையிறக்கம்

Mohamed Dilsad

Wheat flour price hiked

Mohamed Dilsad

Airbus A-380 lands at BIA – [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment