Trending News

INSYS 2017 நிகழ்வில் SLIIT மாணவர்கள் தமது புத்தாக்கமான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்

(UTV|COLOMBO)-INSYS 2017 நிகழ்வில் SLIIT ன் ஐந்து புத்தாக்கமான அணியினர் பங்கேற்றிருந்ததுடன், இவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் இவர்கள் மெரிட் விருதை வென்றிருந்தனர். INSYS 2017 ல் உள்நாட்டு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் கல்விமான்கள் மற்றும் ஆய்வாளர்கள் போன்றவர்கள் பங்கேற்றிருந்ததுடன், உள்நாட்டு நிபுணர்களும் கைகோர்த்து தமது பிந்திய ஆய்வு கண்டறிதல்களை பிரச்சாரப்படுத்தியிருந்ததுடன், நிலைபேறான எதிர்காலத்துக்கான புத்தாக்கங்கள் எனும் தொனிப்பொருளில் தமது கருத்துக்களையும் பரிமாறியிருந்தனர். இந்த நிகழ்வை பாதுக்கயில் அமைந்துள்ள Office Of Research & Innovation Services  (ORIS), Lanka Technological Campus   ஏற்பாடு செய்திருந்தது.

 

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் முன்னணி துறைசார் நிபுணர்கள் போன்றோர் பிரதான கருத்துரையாளர்களில் அடங்கியிருந்ததுடன், இவர்கள் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பொறியியல் தொடர்பில் பங்குபற்றியிருந்தோர் மத்தியில் விளக்கங்களை வழங்கியிருந்தனர். கலந்துரையாடப்பட்டிருந்த தலைப்புகளில் இந்த தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு இலங்கையின் தொழிற்துறைகளின் தயார் நிலை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

 

இந்த நிகழ்வின் போது நடைபெற்ற இரு தொழில்நுட்ப அமர்வுகளில் தொடர்பாடல் பொறியியல், இயக்க ஆற்றல் கட்டமைப்புகள், மாதிரி மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் ரொபோடிக்ஸ் போன்றன குறித்து கவனம் செலுத்தியிருந்தன. உள்நாட்டு பொறியியலாளர்களுக்கு மொபைல் தொடர்பாடல்களில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு பயிலுநர்களுக்கு புத்தாக்கமான பொருள் வடிவமைப்பு பற்றிய கண்காட்சி நடைபெற்றது. நூற்றுக்கு அதிகமான உள்நாட்டு சர்வதேச ஆய்வாளர்கள், கல்விமான்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோர் இந்த சிம்போசியத்தில் பங்கேற்றிருந்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

காற்றின் வேகம் அதிகரிப்பு

Mohamed Dilsad

ආණ්ඩුව දේශීය ණය උගුලකත් සිරවෙලා ද?

Mohamed Dilsad

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment