Trending News

தேர்தல் முறைப்பாடுகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விஷேட பிரிவு

(UTV|COLOMBO)-தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விஷேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற உரிமை மீறல்கள் சம்பந்தமாக கண்டறிவது இதன் நோக்கமாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விஷேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற 0773 088 135 அல்லது 0773 762 112 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இது தவிர 0112 505 574 என்ற இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New spot fines for traffic violations in effect from today

Mohamed Dilsad

Beliatta Pradeshiya Sabha Chairman arrested

Mohamed Dilsad

கடைக்கு சென்ற என் அம்மா எங்கே ?தனது தாயை தொலைத்த சிறுமியின் கதறல்

Mohamed Dilsad

Leave a Comment