Trending News

‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?

(UTV|INDIA)-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படம் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தை இயக்க ‌ஷங்கர் தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியை தைவானில் நடத்தினார்.

கமலின் ‘இந்தியன்-2’ படத்தையும், ரஜினியின் ‘2.0’-வை தயாரித்துள்ள லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தின் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் ஒப்புக் கொண்டால் கமலுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இது அமையும். ‘இந்தியன்-2’ படத்தில் நயன்தாராவுக்கு புரட்சிப் பெண் வேடம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலுவும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
‘இந்தியன்-2’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்

Mohamed Dilsad

Galle Road in front of Presidential Secretariat closed due to a protest

Mohamed Dilsad

Bus strike on Athurugiriya-Pettah route

Mohamed Dilsad

Leave a Comment