Trending News

கொழும்பு கோட்டையிலிருந்து நீராவிப்புகையிரதம்

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரையில் நீராவிப் புகையிரதமொன்று சமீபத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தது.

இந்த ரயில் கடந்த 30ஆம் திகதி பிற்பகல் ஹற்றன் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

கொழும்பு கோட்டையிலிருந்து 29ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த நீராவி புகையிரதம் அன்று இரவு கண்டி ரயில் நிலையத்தை சென்றடைந்தது. இது கண்டியிலிருந்து 30ஆம் திகதி அதிகாலை புறப்பட்டு நானுஓயாவரையில் பயணித்துள்ளது.

இந்த பயணத்தின் போது நீராவி புகையிரதம் ஹற்றன் ரயில் நிலையத்திலும் நானு ஓயாவிலும் நீரை நிரப்பிக்கொண்டது. பின்னர் நானுஓயாவிலிருந்து பண்டாரவளைவரையில் நேற்று புறப்பட்டுச்சென்றது.

ஜேர்மன் ,அவுஸ்ரேலியா, இங்கிலாந்து மற்றும் யப்பான் நாட்டைச்சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் இதில் பயணித்தனர் . ஹற்றன் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை கண்டுகளிக்க பல மக்கள் திரண்டிருந்தனர்.

இவ்வாறான ஒரு ரயில் 2016ஆம் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Prof. Amara Ranathunga passes away

Mohamed Dilsad

Tobacco and liquor seized at customs

Mohamed Dilsad

சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment