(UTV|COLOMBO)-எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற பிரச்சார நடவடிக்கைகள் இன்று (07) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அமைதியான சூழல் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார்.
இதேவேளை எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது ஊழியர்களுக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய விடுமுறையை பெற்றுக் கொடுக்குமாறு அரச மற்றும் தனியார் துறை தொழில் தருனர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வாறு வழங்கக் கூடிய விடுமுறை சம்பளத்துடன் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுடன், ஊழியர்களின் வழமையான விடுமுறையில் எவ்வித இழப்பும் ஏற்படாத விடுமுறையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நாடு பூராகவும் எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]