Trending News

கொழும்பில் சர்வதேச உலக சுகாதார தின வைபவம்

(UTV|COLOMBO)-உலக சுகாதார தின சர்வதேச வைபவம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி கொழும்பு  தாமரைத்தடாக அரங்கில் இடம்பெறும்.

சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் இலங்கையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சுகாதார தின சர்வதேச வைபவம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நேற்றுக் காலை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன. உலக சுகாதார தின வைபவத்தில்இ உலக சுகாதா ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பெட்ரொஸ் ஆதனம் கெப்ரேசஸ் மற்றும் அந்த ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பூனம் வெற்றிபால் சிங் ஆகியோர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Man armed with a knife robs bank in Kiribathgoda

Mohamed Dilsad

தங்காலையில் இன்று மற்றுமோர் துப்பாக்கிச் சூடு

Mohamed Dilsad

Uva Chief Minister to appear before Human Rights Commission for investigation today

Mohamed Dilsad

Leave a Comment