Trending News

தேர்தல் தொடர்பான ஆய்வுகளில் வெளிநாட்டு குழுவினர்

(UTV|COLOMBO)-இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு  குழுவினர் இன்று பல்வேறு மாவட்டங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் வாக்களிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று வாக்குப்பெட்டிகள் அனுப்பப்படும் நடைமுறைகளை  அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

 

விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாடுகளிலிருந்து 10 உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

 

இவர்கள் நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் செய்ததாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்எம் மொஹமட் தெரிவித்தார்.

 

இந்தியாவிலிருந்து 4 பேரும் , தென்கொரியாவிலிருந்து 2 பேரும் , மாலைதீவிலிருந்து 2 பேரும் இந்தோனேசியாவிலிருந்து 2 பேரும் வருகைதந்துள்ளனர். அனைவரும் தேர்தல் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாவர்.

 

இதன் பின்னர் தமது நாட்டிற்கு இது தொடர்பிலான ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணையார் எம்எம் மொஹமட் எமது செய்திப்பிரிவிற்கு மேலும் தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இண்டர் நெட் சேவை 4 மணி நேரம் முடக்கம்

Mohamed Dilsad

Police enter Australia’s closed asylum camp

Mohamed Dilsad

அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment