(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து பிரதமர் பதவியிலிருந்தும் விலகுமாறு கட்சியின் உறுப்பினர்களால் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையிலேயே இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நண்பர்களுடன் இணைந்து அவர்களின் ஆலோசனைக்கமைய செயற்பட்டமையும், நண்பர்களுக்கு அரசாங்கத்தில் பல பதவிகளை பெற்றுக்கொடுத்தமை ஆகிய நடவடிக்கைகளினாலேயே ஐக்கிய தேசிய கட்சி பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதார துறையில் அனைத்து முதல் நிலை பதவிகளையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நண்பர்கள் வசமே காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதமரின் வர்த்தச ஆலோசகர் சரித்த ரத்வத்தையின் சிந்தனைக்கமைய, ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பிரதான பதவியை அவரின் சகோதரரான சுரேன்; ரத்வத்தையை நியமித்தமையால் இடம்பெற்ற மோசடிகளை தொடர்ந்து அரசாங்கத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் பிரதமர் கட்சி தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் அலரிமாளிகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]