Trending News

ஹஷினி ரத்நாயக்க பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவியான ஹசினி அமெந்திரா ரத்நாயக்க கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.

தங்காலை நீதவான் மஹில் விஜேவீர இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

நீதவானின் உத்தரவிற்கு அமைய 10 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையும் , விடுவிக்கப்பட்ட பிரதிவாதியின் வௌிநாட்டு பயணங்களை தடை செய்யும் உத்தரவும் இதன் போது வௌியிடப்பட்டுள்ளது.

சரீர பிணையாளர்கள் இருவரும் சந்தேகநபரின் நெருங்கிய குடும்ப உறவினராக இருக்க வேண்டும் என நிபந்தனையொன்றை விதித்த நீதவான் , எதிர்வரும் 16ம் திகதி சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் இதன்போது உத்தரவிட்டார்.

பிரதிவாதியின் சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட சீர்த்திருத்த மனுவை ஆராய்ந்த தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி , சந்தேகநபரான ஹசினி அமெந்திரா ரத்நாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு தங்காலை நீதவானுக்கு உத்தரவிட்டிருந்தமைக்கு அவருக்கு இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Conduct impartial, independent inquiry” – President orders IGP

Mohamed Dilsad

பெண் சாரணிய இயக்கத்தை பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – பிரதமர்

Mohamed Dilsad

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment