Trending News

இன்று முதல் கொழும்பின் வீதியொன்றுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கே சிரில் சி பெரேரா மாவத்தை, 6 வது ஒழுங்கை பாதையில் இருந்து சுகததாஸ விளையாட்டரங்கின் மெட்பார்க் சந்தி வரையான வீதி இன்று (16) முதல் எதிர்வரும் 02 நாட்களுக்கு வாகன போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீதியில் குடிநீர் குழாய் பொருத்தும் வேலைகள் இடம்பெற இருப்பதால் இன்று இரவு 09.00 மணி முதல் எதிர்வரும் 19ம் திகதி அதிகாலை 05.00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இரண்டு நாட்களுக்கு களனிவௌி புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (16) இரவு 08.00 மணிமுதல் 19ம் திகதி அதிகாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் அந்த மார்க்கத்திலான புகையிரத சேவை இடைநிறுத்தப்படும் என்று புகையிரதப் பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு

Mohamed Dilsad

“அல ரஞ்சி” கைது

Mohamed Dilsad

Cricket elections will be conducted on February 7 – Sports Minister

Mohamed Dilsad

Leave a Comment