Trending News

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு; சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

இந்த இரண்டு வெவ்வேறு கலந்துரையாடல்களிலும் தற்போதைய அரசியலில் ஏற்பட்டுள்ள சமநிலையற்ற தன்மை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படுவதாக தெரிய வந்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

“Ride with Pride” இராணுவத்தினரின் சைக்கிள் ஓட்டப்போட்டி

Mohamed Dilsad

மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்

Mohamed Dilsad

Maldives and Sri Lanka to enhance cooperation to curb drug trafficking

Mohamed Dilsad

Leave a Comment