(UTV|COLOMBO)-இலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15ஆயிரத்து 862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் நீண்டகால காப்புறுதி, பொதுவான காப்புறுதி நடவடிக்கைகள் மூலம் 1இலட்சத்து 18 ஆயிரத்து 16 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் 1 இலட்சத்தி 2ஆயிரத்து 155 ரூபா பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]