Trending News

சிரியா மீதான இரசாயனத் தாக்குதல் – துருக்கி மறுப்பு

(UTV|TURKEY)-சிரியாவில் இரசாயனத் தாக்குதல்களை நடத்தியதாக தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது.

துருக்கிய வெளிவிவகார அமைச்சரை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிரியாவின் அப்ரின் பகுதியில் துருக்கி படைகள் இரசாயன தாக்குதல் நடத்தியதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்புக்களும் குர்திஷ் போராளிகளும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர், தமது இராணுவத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமது இராணுவம் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே செயற்பட்டுவருவதாகவும், சிரியாவில் நிலைகொண்டு ஆயுத தரப்புக்கள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சிரியாவின் அப்ரின் பகுதியில் நிலைகொண்டுள்ள குர்திஷ் ஆயுதத் தரப்புக்களுக்கு எதிராக கடந்த மாதம் முதல் துருக்கி இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு

Mohamed Dilsad

Sri Lanka’s participates at Global Economic Summit on Women

Mohamed Dilsad

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment