Trending News

பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் வெளியானது…!!

(UTV|COLOMBO)-தியதலாவ –கஹகொல்ல பகுதியில் தனியார் பேருந்தொன்றுக்குள் வெடிப்புடன் ஏற்பட்ட தீப்பரவலுக்கு காரணம் கையெறி குண்டொன்றின் வெடிப்பே என தெரிவியந்துள்ளது.

எனினும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே உண்மை தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 5.45 அளவில், தியதலாவ – கஹகொல்ல பகுதியில் வைத்து இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் காயமடைந்த 19 பேரில் 12 இராணுவத்தினர் என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
அந்த 12 பேரில் 7 பேர் இராணுவத்தினர் எனவும் 5 பேர் விமானபடையினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இது தீவிரவாதசெயல் அல்லவெனவும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றிலேயே இன்று அதிகாலையில் இந்த வெடிப்புடன் கூடிய தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

President requests public and private sectors as well as politicians to join hands in combating dengue

Mohamed Dilsad

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

Mohamed Dilsad

ஈஸியாக சில்லி சிக்கன் செய்வது எப்படி?

Mohamed Dilsad

Leave a Comment